< Back
தேசிய செய்திகள்
நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க பஞ்சாப் சட்டசபையை கூட்டும் உத்தரவு வாபஸ் கவர்னர் நடவடிக்கை
தேசிய செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க பஞ்சாப் சட்டசபையை கூட்டும் உத்தரவு வாபஸ் கவர்னர் நடவடிக்கை

தினத்தந்தி
|
22 Sept 2022 9:30 AM IST

பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது.

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலத்தில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடந்து வருகிறது. அந்த அரசை கவிழ்க்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜனதா கோடிக்கணக்கான ரூபாய் பேரம் பேசி வருவதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியது.

தங்கள் எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சி தாவமாட்டார்கள் என்பதை நிரூபிக்கும்வகையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பஞ்சாப் சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டுமாறு பஞ்சாப் அரசு கோரிக்கை விடுத்தது. அதன்படி, இன்று (வியாழக்கிழமை) சிறப்பு கூட்டத்தை கூட்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டு இருந்தார்.

ஆனால், நம்பிக்கை தீர்மானம் தாக்கல் செய்வதற்காக மட்டும் சிறப்பு கூட்டம் நடத்த விதிகளில் இடம் இல்லை என்று காங்கிரஸ், பா.ஜனதா தலைவர்கள் கவர்னரை சந்தித்து முறையிட்டனர். இந்தநிலையில், சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டும் உத்தரவை கவர்னர் நேற்று வாபஸ் பெற்றார்.

மேலும் செய்திகள்