< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குருவாயூர் கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடக்கம்
|3 July 2022 6:19 AM IST
முகாமில் யானைகளுக்கு மசாஜ், உடற்பயிற்சி, சத்தான உணவு வகைகள் ஆகியவை வழங்கப்பட உள்ளன.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் குன்னத்தூரில், குருவாயூர் கோவில் யானைகளுக்காக ஒரு மாத புத்துணர்வு முகாம் தொடங்கியது. இந்த புத்துணர்வு முகாமிற்காக 14 லட்சம் ரூபாயை தேவசம்போர்டு ஒதுக்கியுள்ளது.
இந்த முகாமில் யானைகளுக்கு மசாஜ், உடற்பயிற்சி, சத்தான உணவு வகைகள் ஆகியவை வழங்கப்பட உள்ளன. முகாமின் முடிவில் ஒவ்வொரு யானையும் 400 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.