< Back
தேசிய செய்திகள்
ரூ.3 ஆயிரம் கடனுக்காக கடைக்காரர் அடித்துக்கொலை
தேசிய செய்திகள்

ரூ.3 ஆயிரம் கடனுக்காக கடைக்காரர் அடித்துக்கொலை

தினத்தந்தி
|
27 Jan 2023 8:12 AM IST

அரியானாவில் ரூ.3 ஆயிரம் கடனுக்காக கடைக்காரர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குருகிராம்,

அரியானா மாநிலம் குருகிராம் அருகே கோஸ்கார் கிராமத்தை சேர்ந்தவர் இந்தர்குமார் (வயது 33). இவர் வீட்டிலேயே மளிகை கடை நடத்தி வந்தார். இவரிடம் அதே ஊரை சேர்ந்த சாகர் யாதவ் என்பவர் மின்சார கட்டணம் செலுத்துவதற்காக கடனாக ரூ.19 ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் இந்தர்குமார் அதில் ரூ.3 ஆயிரத்தை செலவு செய்ததுடன், மின்கட்டணம் செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

3 நாட்களுக்கு முன்பு இந்தர் குமாரிடம் சாகர் யாதவ், பணத்தை கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இரவில் சாகர் யாதவ் மற்றும் 3 பேர் சேர்ந்து இந்தர் குமாரை அவரது வீட்டு முன்பாக வைத்து கம்பால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த இந்தர் குமார் மறுநாள் உயிரிழந்தார்.

போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்