< Back
தேசிய செய்திகள்
குருகிராம் பட்டாசு விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு
தேசிய செய்திகள்

குருகிராம் பட்டாசு விபத்து: பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

தினத்தந்தி
|
21 Oct 2022 3:53 PM IST

வெடி விபத்தில் காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், காயம் அடைந்த மேலும் 3 பேரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.

அரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள நகக்ரோலா கிராமத்தில் உள்ள வீட்டில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் அவர்களது உறவினர்கள் இருவர் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

வெடி விபத்தில் காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், காயம் அடைந்த மேலும் 3 பேரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் செய்திகள்