< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று குரு பூர்ணிமா பவுர்ணமி கருட சேவை
|3 July 2023 12:38 AM IST
உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி கருட சேவை நடந்து வருகிறது. அதன்படி இந்த மாதம் குரு பூர்ணிமா பவுர்ணமியையொட்டி நாளை (திங்கட்கிழமை) கருட சேவை நடக்கிறது. உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார்.
தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கோவிலின் 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பவுர்ணமியையொட்டி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.