< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குருகிராம் பகுதியில் சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுதங்கள் விற்பனை: போலீசார் அதிர்ச்சி!
|1 Oct 2022 6:37 AM IST
சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுத விற்பனை செய்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குருகிராம்,
டெல்லியை ஒட்டியுள்ள குருகிராம் பகுதியில் சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுத விற்பனை செய்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகநூல் மற்றும் வாட்ஸ்அப் விளம்பரங்களில் அனுமதியின்றி ஆயுதங்கள் விற்பனை செய்ததாக குருகிராம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்காக ஒரு மொபைல் எண்ணைப் பயன்படுத்தி மூன்று பேஸ்புக் கணக்குகள் திறக்கப்பட்டன. கைத்துப்பாக்கிகள் விற்பனைக்கு என்று அந்த மொபைல் எண்ணில் இருந்து மக்களுக்கு வாட்ஸ்அப் செய்திகளும் அனுப்பப்பட்டன.
கலா ஜாத்தேரி என்ற ரவுடியின் பெயரை குறிப்பிட்டு சமூக ஊடக விளம்பரங்கள் மூலம் ஆயுத விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறினர்.