< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை - 2 ராணுவ வீரர்கள் படுகாயம்
|10 Aug 2024 5:15 PM IST
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, ராணுவ சிறப்பு படைப்பிரிவினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதையடுத்து ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும், அங்கு இருதரப்பினருக்கிடையே தொடர்ந்து துப்பாக்கி சூடு நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.