< Back
தேசிய செய்திகள்
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை - 3 துணை ராணுவப்படை வீரர்கள் காயம்
தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை - 3 துணை ராணுவப்படை வீரர்கள் காயம்

தினத்தந்தி
|
7 Nov 2023 4:48 PM IST

மின்பா பகுதியில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களிடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது.

ராய்ப்பூர்,

90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்காரில், 20 தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுக்மா மாவட்டத்தில் தொண்டமர்கா பகுதியில் நக்சலைட்டுகள் வைத்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் படுகாயமடைந்தார்.

தொடர்ந்து சுக்மா மாவட்டத்தில் உள்ள மின்பா பகுதியில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களிடையே துப்பாக்கிச் சண்டை வெடித்தது. சுமார் 20 நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலில், துணை ராணுவப்படையைச் சேர்ந்த 3 வீரர்கள் காயமடைந்தனர். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்