< Back
தேசிய செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்
தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்

தினத்தந்தி
|
28 Sept 2024 1:21 PM IST

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையினர் 4 பேர் காயமடைந்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அதிகாம் கிராமத்தில் தேவ்சார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த மோதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் போக்குவரத்து கூடுதல் எஸ்.பி. மும்தாஜ் அலி படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்