காஷ்மீரில் பாதுகாப்பு படை-பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை
|ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், நடப்பு ஆண்டில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
பாராமுல்லா,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் பகுதியில், வாட்டர்கேம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதனை தொடர்ந்து அந்த பகுதியை படையினர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதன்பின்பு தேடுதல் பணியையும் தொடங்கி உள்ளனர். ஜம்மு பகுதியில் கடந்த சில மாதங்களாக தோடா மற்றும் உதாம்பூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2014-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் நடப்பு ஆண்டில் 3 கட்டங்களாக ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 4-ந்தேதி நடைபெறும்.
இந்த சூழலில், பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் கூட்டாக இணைந்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.