< Back
தேசிய செய்திகள்
குஜராத் மாநில வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் : அசாம் முதல்-மந்திரி நம்பிக்கை

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

குஜராத் மாநில வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் : அசாம் முதல்-மந்திரி நம்பிக்கை

தினத்தந்தி
|
9 Dec 2022 12:22 AM IST

பா.ஜனதாவுக்கு கிடைத்துள்ள குஜராத் மாநில வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று அசாம் முதல்-மந்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கவுகாத்தி,

குஜராத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து உள்ளது. இந்த வெற்றி வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'குஜராத் வெற்றி, இந்தியாவுக்கு. பிரதமர் மோடிஜி மீது கொண்ட அன்பு மற்றும் நம்பிக்கையால் இந்த வரலாற்று தீர்ப்பை அளித்துள்ளதன் மூலம், மக்கள் 2024-க்கான பாதையைக் காட்டியுள்ளனர்' என குறிப்பட்டு இருந்தார்.

மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை, மத்திய மந்திரி அமித்ஷாவின் வியூகம், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவின் வழிகாட்டுதல் மற்றும் முதல்-மந்திரி பூபேந்திர படேலின் சிறந்த நிர்வாகத்துக்கு கிடைத்த வெற்றி இது எனவும் அசாம் முதல்-மந்திரி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்