< Back
தேசிய செய்திகள்
குஜராத்:  எச்சில் துப்பி அசுத்தம்; அபராத தொகையாக ரூ.2 லட்சம் வசூல்
தேசிய செய்திகள்

குஜராத்: எச்சில் துப்பி அசுத்தம்; அபராத தொகையாக ரூ.2 லட்சம் வசூல்

தினத்தந்தி
|
15 March 2023 11:03 PM IST

குஜராத்தின் சூரத் நகரில் பொது இடங்களில் எச்சில் துப்பியவர்களுக்கு எதிராக அபராதம் விதித்ததில் ரூ.2 லட்சம் வசூல் ஆகி உள்ளது.



சூரத்,


குஜராத்தின் சூரத் நகரில் தூய்மையை கடைப்பிடிக்கும் வகையில், பொது இடங்களில் மக்கள் எச்சில் துப்புவதற்கு தடை விதித்து, மாநகராட்சி அதிகாரிகள் கடுமையாக கண்காணித்து வருகின்றனர்.

இதற்காக நகரின் பல முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி. கேமிராக்கள் அமைக்கப்பட்டு, உள்ளாட்சி பணியாளர்கள் அதற்காக பணி அமர்த்தப்பட்டு எச்சில் துப்பும் நபர்களை கண்டறியும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், கடந்த சில நாட்களில் பணியாளர்களிடம் பலர் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு அபராதம் விதித்து ஆன்லைன் வழியே சலான் அனுப்பப்பட்டு உள்ளது. இதன்படி, 18 ஆயிரம் பேர் மீது அதிகாரிகள் அபராதம் விதித்து உள்ளனர்.

இதனால், அபராத தொகையாக இதுவரை ரூ.2 லட்சம் வசூலாகி உள்ளது. நகரில், தூய்மையாக இருப்பதற்கான பழக்கம் பொதுமக்களிடம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணம் உருவாவதற்காக இந்த சிறப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது என சூரத் மாநகராட்சி மேயர் ஹேமலி பொகவாலா கூறியுள்ளார்.

இதற்காக சூரத் போலீசாரிடம் இருந்தும் உதவியை பெற்று வருகிறோம். ஆர்.டி.ஓ. அலுவலகத்துடன் இணைந்து செயல்படவும் திட்டம் தீட்டி உள்ளோம். வருகிற ஏப்ரல் முதல் இந்த புதிய ஏற்பாடு செயல்பட தொடங்கும்.

இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பொது இடங்களில் எச்சிலை துப்பி உள்ளனர். இந்த எண்ணிக்கை வருகிற காலங்களில் உயர கூடும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்