< Back
தேசிய செய்திகள்
அகமதாபாத்: அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதிய விபத்தில் காவலர் உட்பட9 பேர் பலி.!

image source: INDIA TV

தேசிய செய்திகள்

அகமதாபாத்: அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதிய விபத்தில் காவலர் உட்பட9 பேர் பலி.!

தினத்தந்தி
|
20 July 2023 7:05 AM IST

இந்த விபத்தில் காவலர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்-எஸ்ஜி நெடுஞ்சாலையில் அதிகாலை 1.15 மணியளவில் இரு லாரிகளுக்கு இடையே விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு லாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். இதனைத் தொடர்ந்து மீட்புப்பணிக்காக போலீசாருடன் அங்கிருந்த மக்கள் சிலர் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் அதிவேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று, மக்கள் கூட்டம் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் காவலர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்