< Back
தேசிய செய்திகள்
குஜராத்: இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் கைது
தேசிய செய்திகள்

குஜராத்: இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் கைது

தினத்தந்தி
|
18 Jan 2024 2:19 AM IST

குடியரசு தின விழா நெருங்கி வரும் சூழலில், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதி அருகே சந்தேகத்திற்குரிய வகையில் ஆள் நடமாட்டம் இருப்பதை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து அங்கு சோதனை நடத்தியபோது, இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற ஒரு நபரை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர் மனநலம் குன்றியவராக காணப்படுவதால், அவரைப் பற்றிய விவரங்களை உடனடியாக கண்டறிய முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு குடியரசு தின விழா நெருங்கி வரும் சூழலில், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்