< Back
தேசிய செய்திகள்
ராகுல் காந்தி வழக்கில் குஜராத் ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு
தேசிய செய்திகள்

ராகுல் காந்தி வழக்கில் குஜராத் ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு

தினத்தந்தி
|
6 July 2023 9:21 PM IST

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனை குறித்த வழக்கில் குஜராத் ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

காந்திநகர்,

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி என்ற பெயர் குறித்து அவதூறான கருத்துக்களை பேசியதாக அவர் மீது சூரத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சூரத் கோர்ட்டு, ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தைத் தொடர்ந்து, ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார்.

இதனிடையே 2 ஆண்டுகள் சிறை தண்டனை உத்தரவை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் காந்தி மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ராகுல் காந்தி வழக்கில் குஜராத் ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்