< Back
தேசிய செய்திகள்
பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆஜராக குஜராத் கோர்ட்டு சம்மன்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆஜராக குஜராத் கோர்ட்டு சம்மன்

தினத்தந்தி
|
29 Aug 2023 1:27 AM IST

அவதூறு வழக்கில் பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆஜராக குஜராத் கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.

ஆமதாபாத்,

பீகார் மாநில துணை முதல்-மந்திரி, ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ். இவர் கடந்த மார்ச் 21-ந் தேதி பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'குஜராத்தியர்கள் மட்டுமே மோசடிப் பேர்வழிகளாக இருக்க முடியும்' என்றார். இதுதொடர்பாக, குஜராத் ஆமதாபாத்தைச் சேர்ந்த தொழிலபதிபரும், சமூக சேவகருமான ஹரேஷ் மேத்தா, அங்குள்ள பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். தேஜஸ்வி யாதவ் பேசியதற்கான சான்றையும் அவர் சமர்ப்பித்தார்.

அதில் விசாரணை மேற்கொண்ட கோர்ட்டு, தேஜஸ்வி யாதவுக்கு எதிராக போதுமான ஆதாரம் இருப்பதாக கூறி, அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. இந்த அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்காக வருகிற செப்டம்பர் 22-ந் தேதி கோர்ட்டில் தேஜஸ்வி யாதவ் ஆஜராக வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்