< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
வரி ஏய்ப்பு புகார் எதிரொலி: குஜராத் முழுவதும் 150 இடங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் அதிரடி சோதனை!
|12 Nov 2022 3:51 PM IST
குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகள் இன்று 150 இடங்களில் சோதனை நடத்தினர்.
ஆமதாபாத்,
குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை(ஏடிஎஸ்) மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகள் கூட்டாக மாநிலத்தில் இன்று 150 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர்.
குஜராத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்பு இந்த சோதனை நடந்துள்ளது. சூரத், ஆமதாபாத், ஜாம்நகர், பருச், பாவ்நகர் போன்ற மாவட்டங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா வியாபாரம் குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு சற்று முன், இதுபோன்ற செயல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.