< Back
தேசிய செய்திகள்
குஜராத் மாநிலத்தில் புதிய எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் மீது கிரிமினல் வழக்கு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

குஜராத் மாநிலத்தில் புதிய எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் மீது கிரிமினல் வழக்கு

தினத்தந்தி
|
12 Dec 2022 12:36 AM IST

குஜராத் மாநிலத்தில் புதிய எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

கட்சிவாரியாக பார்க்கிறபோது, பா.ஜ.க.வில் 26 பேர், காங்கிரசில் 9 பேர், ஆம் ஆத்மியில் 2 பேர், சுயேச்சைகளில் 2 பேர், சமாஜ்வாடி கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. மீது இந்த வழக்குகள் உள்ளன.

இவர்களில் 29 பேர் மீது கொலை முயற்சி, கற்பழிப்பு உள்ளிட்ட கொடிய வழக்குகள் இருக்கின்றன. இந்த 29 பேரில் 20 பேர் பா.ஜ.க.வினர், 4 பேர் காங்கிரஸ் கட்சியினர், 2 பேர் ஆம் ஆத்மி கட்சியினர், 2 பேர் சுயேச்சைகள், ஒருவர் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

முந்தைய சட்டசபையில் 47 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்களை ஜனநாயக சீர்திருத்த சங்கம்- குஜராத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்