< Back
தேசிய செய்திகள்
குஜராத்தில் உள்ள டெக் சிட்டியில் மது அருந்த அனுமதி - அரசு அறிவிப்பு
தேசிய செய்திகள்

குஜராத்தில் உள்ள டெக் சிட்டியில் மது அருந்த அனுமதி - அரசு அறிவிப்பு

தினத்தந்தி
|
23 Dec 2023 12:47 PM IST

டெக் சிட்டியில் உள்ள ஓட்டல், ரெஸ்டாரன்ட், கிளப்புகளில் மதுபானம் அருந்த குஜராத் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

காந்திநகர்,

குஜராத் மாநிலத்தில் பூரணமான மதுவிலக்கு அமலில் உள்ளது. அம்மாநிலத்தின் காந்திநகர் மாவட்டத்தில் டெக் சிட்டி அமைந்துள்ளது. இது இந்தியாவின் முதல் க்ரீன்பீல்டு ஸ்மார்ட் சிட்டியாக கருதப்படுகிறது. மேலும் சர்வதேச நிதி சேவை மையமாகவும் கருதப்படுகிறது. ஆரக்கிள், சைரில், பேங்க் ஆப் அமெரிக்கா, சிட்டி பேங்க் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் கிளைகள் டெக் சிட்டியில் அமைந்துள்ளன.

இந்நிலையில், டெக் சிட்டியில் உள்ள ஓட்டல், ரெஸ்டாரன்ட், கிளப்புகளில் மதுபானம் அருந்த குஜராத் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. டெக் சிட்டியில் பணிபுரியும் நபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட பகுதியில் மதுபானம் அருந்த அனுமதி அளித்துள்ளது. அதே போல ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்களில் மதுபானங்களை வாங்கி செல்ல அனுமதி கிடையாது என அரசு தெரிவித்துள்ளது. டெக் சிட்டியில் விரைவில் குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் வெளிநாடுகளை சேர்ந்த பல்வேறு நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டை கருத்தில் கொண்டே டெக் சிட்டியில் மது அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.


மேலும் செய்திகள்