< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குஜராத்: தெருநாய்கள் கடித்து குதறியதில் 3 வயது சிறுவன் உயிரிழப்பு
|1 Jun 2023 1:03 AM IST
தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து கடித்துக் குதறியதில் சிறுவன் படுகாயம் அடைந்தான்.
காந்திநகர்,
குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ளது டம்நகர் கிராமம். இந்த பகுதியை சேர்ந்த ரோனக் ரத்வா என்ற 3 வயது சிறுவன் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் ஊருக்கு ஒதுக்குப்புறமான தோட்டத்துக்கு சென்றிருந்தான். பெரியவர்கள் தோட்டவேலையில் ஈடுபட்டிருக்க சற்று தொலைவில் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கு வந்த தெருநாய்கள் கூட்டமாக சேர்ந்து சிறுவனை தாக்கின. கழுத்து, தலை, பின்புறம் என பல இடங்களில் நாய்கள் கடித்துக் குதறியதில் சிறுவன் படுகாயம் அடைந்தான். அவனது பெற்றோர், விரைந்து வந்து சிறுவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோதும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவன் உயிரிழந்தான். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.