< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குஜராத்; ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உட்பட 6 பேர் பலி..
|10 Oct 2023 3:18 PM IST
ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
தாஹோத்,
குஜராத் மாநிலம் தஹோத் மாவட்டத்தின் தாஹோத்-அலிராஜ்பூர் நெடுஞ்சாலையில் இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உட்பட 6 பேர் ஆட்டோவில் சென்றனர். அவர்கள் பயணித்த ஆட்டோ மீது லாரி மோதியது. லாரி மோதியதில் ஆட்டோ நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் சிக்கி ஆட்டோவில் பயணித்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ஆட்டோ டிரைவரை அங்குள்ள பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.