< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குஜராத்: அரசு பஸ் கவிழ்ந்ததில் 40 பேர் காயம்
|16 Oct 2023 10:04 AM IST
குஜராத்தில் சாலை விபத்தில் சிக்கி அரசு பஸ் கவிழ்ந்ததில் 40 பயணிகள் வரை காயமடைந்து உள்ளனர்.
சுரேந்திரநகர்,
குஜராத்தில் தியோதர் நகரில் இருந்து ஜுனாகத் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 55 முதல் 60 பயணிகள் இருந்துள்ளனர்.
இந்த நிலையில், லக்தர் தாலுகாவில் வானா கிராமம் அருகே சென்றபோது நள்ளிரவில் பஸ் திடீரென சாலையின் ஓரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த சம்பவத்தில் பஸ்சில் இருந்த பயணிகளில் 40 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும், அந்த பகுதி மக்கள் மற்றும் போலீசார் உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ் விபத்தில் காயமடைந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்திற்கான காரணம் பற்றி தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.