< Back
தேசிய செய்திகள்
குஜராத்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட  15 அடி நீள ராட்சத முதலையால் பரபரப்பு
தேசிய செய்திகள்

குஜராத்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 15 அடி நீள ராட்சத முதலையால் பரபரப்பு

தினத்தந்தி
|
29 Aug 2024 1:44 PM IST

ராட்சத முதலையை பார்த்து அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

அகமதாபாத்,

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மழைக்கு 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஐ தாண்டியுள்ளது.

இந்த நிலையில், குஜராத்தில் பெய்த கனமழை வெள்ளம் காரணமாக குடியிருப்பு பகுதியில் முதலை புகுந்துள்ளது. சுமார் 15 அடி நீளம் கொண்ட ராட்சத முதலையை பார்த்து அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ராட்சத முதலையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். அதனை பாதுகாப்பான இடத்தில் விடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்