< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: மாணவர்கள் 12 பேர் பலி
|18 Jan 2024 9:09 PM IST
குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 மாணவர்கள் பலியாகியுள்ளனர்.
வதோதரா,
குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், படகில் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள் 12 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். 2 ஆசிரியர்களும் பலியாகினர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
விபத்துக்குள்ளான சுற்றுலா படகில் 24 மாணவர்களும் 4 ஆசிரியர்கள் பயணம் செய்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ரூ. 2 லட்சம் நிவாரணம் அளித்துள்ளார். அதேபோல் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் ந்வாரண உதவி அளித்தார்.