< Back
தேசிய செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலி
தேசிய செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி பலி

தினத்தந்தி
|
11 Sept 2023 12:15 AM IST

மைசூருவில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் காவலாளி பலியானார்.

மைசூரு

மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ்(வயது57). இவர் மைசூரு மாவட்டம் மேட்டுகள்ளி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில், கடந்த 7-ந் தேதி நாகராஜ் வேலைக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்து அவர் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது நாகராஜ் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த நாகராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மைசூரு கே.ஆர். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்