< Back
தேசிய செய்திகள்
மிகப்பெரும் வரி சீர்திருத்தம் ஜிஎஸ்டி -  பிரதமர் மோடி பெருமிதம்

Image Courtesy : PTI 

தேசிய செய்திகள்

மிகப்பெரும் வரி சீர்திருத்தம் ஜிஎஸ்டி - பிரதமர் மோடி பெருமிதம்

தினத்தந்தி
|
1 July 2022 3:11 PM IST

ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்தன.

புதுடெல்லி,

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்பட்டது.சேவை வரி, உற்பத்தி வரி, மதிப்பு கூட்டு வரி உள்பட 17 வகையான மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து இந்த வரி கொண்டுவரப்பட்டது. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்தன.

இந்த நிலையில் ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 5 ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் ;

மிகப்பெரும் வரி சீர்திருத்தம் ஜிஎஸ்டி.ஒரே நாடு ஒரே வரி என்ற தொலைநோக்கு பார்வை நிறைவேறியுள்ளது.என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்