< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கடந்த டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி.வசூல் ரூ.1.49 லட்சம் கோடி - மத்திய அரசு தகவல்
|1 Jan 2023 7:00 PM IST
கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1,,49,507 லட்சம் கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது
புதுடெல்லி,
கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.1,,49,507 லட்சம் கோடி வசூலாகி உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, 10-ஆவது முறையாக நாட்டின் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.4 லட்சத்தை கடந்துள்ளது
இதுதொடர்பாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
மத்திய ஜி.எஸ்.டி. வருவாயானது ரூ.26, ஆயிரத்து 711 கோடி ரூபாயாக உள்ளதாகவும், மாநில ஜி.எஸ்.டி வருவாயானது ரூ.33 ஆயிரத்து 357 கோடியாக உள்ளதாகவும், ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி வருவாயானது 78 ஆயிரத்து 434 கோடி ரூபாயாக உள்ளதாகவும் மத்திய நிதி துறை அமைச்சகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
இதில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வரி ரூ. 40 ஆயிரத்து 263 கோடியும், இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீது விதிக்கப்பட்டது உள்ளிட்ட செஸ் வரி ரூ.11 ஆயிரத்து 5 கோடியும் அடங்கும்.