< Back
தேசிய செய்திகள்
ஜூன் மாதத்திற்கான மொத்த ஜி.எஸ்.டி வரி வசூல் 1.61 லட்சம் கோடி - மத்திய நிதி அமைச்சகம் தகவல்
தேசிய செய்திகள்

ஜூன் மாதத்திற்கான மொத்த ஜி.எஸ்.டி வரி வசூல் 1.61 லட்சம் கோடி - மத்திய நிதி அமைச்சகம் தகவல்

தினத்தந்தி
|
1 July 2023 3:55 PM IST

ஜூன் மாத ஜி.எஸ்.டி வரியாக ரூ.1,61,497 கோடி வசூல் செய்யப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஜூன் மாத ஜி.எஸ்.டி வரியாக ரூ.1,61,497 கோடி வசூல் செய்யப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட 12 சதவீதம் அதிகமாகும். நான்காவது முறையாக மொத்த ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய நிதி ஆண்டுகளில் முதல் காலாண்டுக்கான சராசரி மாதாந்திர மொத்த ஜி.எஸ்.டி வசூல் முறையே ரூ.1.10 லட்சம் கோடி, ரூ.1.51 லட்சம் கோடி மற்றும் ரூ.1.69 லட்சம் கோடி ஆகும்.

மேலும் தமிழகத்திலிருந்து ஜி.எஸ்.டி வரியாக ரூ.9,600.63 கோடி வசூல் செய்யப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்