< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் 28, 29-ந்தேதிகளில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்..!

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

காஷ்மீரில் 28, 29-ந்தேதிகளில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்..!

தினத்தந்தி
|
16 Jun 2022 10:45 PM GMT

28, 29-ந்தேதிகளில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் காஷ்மீரில் நடக்கிறது.

புதுடெல்லி,

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 47-வது கூட்டம் இம்மாதம் 28 மற்றும் 29-ந் தேதிகளில் நடக்கிறது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடக்க உள்ளது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமை தாங்குகிறார்.ஜி.எஸ்.டி. கவுன்சில் உறுப்பினர்களாக இருக்கும் மாநில நிதி மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிகிதத்தை மாற்றி அமைப்பது தொடர்பான மாநில மந்திரிகள் குழுவின் அறிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. சூதாட்ட விடுதிகள், பந்தய மைதானங்கள், ஆன்லைன் விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பது பற்றியும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

மேலும் செய்திகள்