< Back
தேசிய செய்திகள்
நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜூலை 11-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..!
தேசிய செய்திகள்

நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜூலை 11-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்..!

தினத்தந்தி
|
16 Jun 2023 1:48 AM GMT

நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜூலை 11-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

ஜிஎஸ்டி (சரக்கு-சேவை வரி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தலைமையில் (ஜூலை 11-ஆம் தேதி) நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டம் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-ஆவது கூட்டம் ஆகும். இதில் மாநில நிதியமைச்சா்கள் பங்கேற்க உள்ளனர்.

சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி, ஆன்லைன் விளையாட்டுகள் மீதான ஜிஎஸ்டியை அதிகரிப்பது, பன்நோக்கு பயன்பாட்டு வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை மறுஆய்வு செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்