< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மார்ச் மாதத்தில் ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூல் - மத்திய நிதி அமைச்சகம் தகவல்
|2 April 2024 12:16 AM IST
2-வது அதிகபட்ச தொகையாக மார்ச் மாதத்தில் ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது.
புதுடெல்லி,
கடந்த மார்ச் மாதத்தில், ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு ஜி.எஸ்டி. அமலுக்கு வந்ததில் இருந்து வசூலான அதிகபட்ச தொகை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கிடைத்த ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் கோடி ஆகும். அதற்கு அடுத்தபடியாக 2-வது அதிகபட்ச வசூல், இதுவே ஆகும்.
கடந்த 2023-2024 நிதியாண்டில் மொத்தம் ரூ.20 லட்சத்து 14 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டில் கிைடத்த மொத்த வசூலை விட 11.5 சதவீதம் அதிகம். கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூலானது.