< Back
தேசிய செய்திகள்
அசாமில் தேயிலை தோட்டத்தில் கிடந்த சீன வெடிகுண்டுகள்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

அசாமில் தேயிலை தோட்டத்தில் கிடந்த சீன வெடிகுண்டுகள்

தினத்தந்தி
|
27 Dec 2022 4:32 AM IST

அசாமில் தேயிலை தோட்டத்தில் சீன வெடிகுண்டுகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திப்ருகர்,

அசாம் மாநிலம் திப்ருகர் மாவட்டத்தின் தெற்கு ஜலன் பகுதியில் ஒரு தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருட்கள் கிடப்பதை அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடம் விரைந்த போலீசார் அங்கு கிடந்த பொருட்களை கைப்பற்றினர். அதில் 2 சீன கையெறி குண்டுகள், ஏ.கே. 47 துப்பாக்கியின் 2 தோட்டா குப்பிகள் மற்றும் 12 தோட்டாக்கள் இருந்தன.

இதையடுத்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு வகைகளை எந்த அமைப்பு பயங்கரவாதிகள் பயன்படுத்துவார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணையில் இறங்கினர். "சந்தேகமுள்ள சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது, ஆனால் யாரையும் கைது செய்யவில்லை" என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்