பட்ஜெட் 2024: ஒரு ரூபாயில் நாட்டின் வரவு, செலவு எவ்வளவு? - விவரம் இதோ
|மத்திய பட்ஜெட்டில் ஒரு ரூபாயில் வரவு மற்றும் செலவு எவ்வளவு என்ற விவரத்தை பார்க்கலாம்
புதுடெல்லி,
2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் காலை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றன. பட்ஜெட்டில் ஒரு ரூபாயில் வரவு எவ்வளவு? செலவு எவ்வளவு? என்ற விவரத்தை பார்க்கலாம்.
மத்திய அரசின் வருவாயைப் பொருத்தவரை ஒரு ரூபாயில், கடன் மூலம் 27 காசுகள் அரசுக்கு கிடைக்கிறது. அடுத்ததாக வருமான வரியாக 19 காசுகள் கிடைக்கின்றன. ஜிஎஸ்டி மற்றும் இதர வரிகள் மூலம் 18 காசுகளும், பெருநிறுவன வரியாக 17 காசுகளும், வரி அல்லாத வருவாயாக 9 காசுகளும் வருவாயாக கிடைக்கின்றன. மத்திய கலால் வரியாக 5 காசுகளும், சுங்க வரியாக 4 காசுகளும், கடன் அல்லாத மூலதன வருவாயாக ஒரு காசும் கிடைக்கிறது.
மத்திய அரசின் செலவை பொறுத்தவரையில் ஒரு ரூபாய் அடிப்படையில் அதிகபட்சமாக மாநிலங்களுக்கான நிதிப் பங்கீடாக 21 காசுகளும், வட்டிக்கு 19 காசுகளும் செலவாகின்றன. ராணுவம் அல்லாத மத்திய அரசு திட்டங்களுக்கு 16 காசுகளும், இதர செலவுகள் மற்றும் நிதி ஆணைய பரிவர்த்தனைகளுக்காக தலா 9 காசுகளும் செலவழிக்கப்படுகின்றன. இதை தவிர ராணுவத்திற்கு 8 காசுகளும், மானியத்திற்கு தலா 6 காசுகளும் செலவழிக்கப்படுகின்றன.