< Back
தேசிய செய்திகள்
மாநிலங்களவை தலைவருக்கு அவமதிப்பா? ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்க மத்திய மந்திரி வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

மாநிலங்களவை தலைவருக்கு அவமதிப்பா? ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்க மத்திய மந்திரி வலியுறுத்தல்

தினத்தந்தி
|
27 July 2023 12:59 AM IST

மாநிலங்களவை தலைவரை அவமதித்ததாக குற்றம் சாட்டிய மத்திய மந்திரி, ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரம், சபைத்தலைவர் ஜெகதீப் தன்கரை நோக்கி கேள்வி எழுப்பினார். மணிப்பூர் பற்றிய கேள்விகளை அனுமதிக்காதது ஏன்? பதில் அளிக்காதது ஏன்? என்று அவர் கேட்டார்.

அதற்கு ஜெகதீப் தன்கர், ப.சிதம்பரம் சொல்வது தனக்கு புரியவில்லை என்று கூறினார்.

அப்போது, அவை முன்னவரும், மத்திய மந்திரியுமான பியுஷ் கோயல் எழுந்து கூறியதாவது:-

சபைத்தலைவரை உறுப்பினர் கேள்வி கேட்பதும், குற்றச்சாட்டுகளை சொல்வதும் துரதிருஷ்டவசமானது. சபைத்தலைவரை சர்ச்சையில் இழுத்துள்ளார். அவர் சொல்வது அவமதிப்பு. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இது, ப.சிதம்பரத்தின் வழக்கமான பாணி. அறிவுஜீவி என்ற போர்வையில், அவர் சபைத்தலைவரை அவமதிக்க முடியாது என்று அவர் கூறினார்.

சபைத்தலைவர் ஜெகதீப் தன்கர், அனுபவம்வாய்ந்த ப.சிதம்பரத்தின் அந்தஸ்துக்கு இது அழகல்ல என்று கூறினார்.

மேலும் செய்திகள்