< Back
தேசிய செய்திகள்

Image Courtacy: PTI
தேசிய செய்திகள்
'அக்னிபத்' திட்டம் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு - ராஜ்நாத் சிங்

26 Jun 2022 5:18 AM IST
‘அக்னிபத்’ திட்டம் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படும் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் புதிய 'அக்னிபத்' திட்டத்துக்கு பரவலாக எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த திட்டம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும், ஆண்டுதோறும் இத்திட்டம் ஆய்வு செய்யப்படும் என்றும், அப்போது குறைபாடுகளோ, சவால்களோ எழுந்தால் அவை சரிசெய்யப்படும் என்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று தெரிவித்துள்ளார்.