< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கன்ஷிராமுக்கு 'பாரத ரத்னா' வழங்க வேண்டும்: பகுஜன் சமாஜ் கோரிக்கை
|4 Feb 2024 3:27 AM IST
நாட்டு மக்களை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்தியதில் கன்ஷிராமின் பங்களிப்பு ஒப்பற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ,
பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானிக்கு நேற்று பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷிராமுக்கும் இந்த உயரிய விருது வழங்க வேண்டும் என அந்த கட்சி கோரிக்கை விடுத்து உள்ளது.
இது தொடர்பாக கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் ஆனந்த் தனது எக்ஸ் தளத்தில், 'கன்ஷிராம் ஜிக்கும் மத்திய அரசு விரைவில் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். சமூக மாற்றத்தின் மிகப்பெரிய தலைவரான அவர், கோடிக்கணக்கான தலித் மக்களுக்கு அரசியல் வலிமையை வழங்கினார். நாட்டு மக்களை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மேம்படுத்தியதில் அவரது பங்களிப்பு ஒப்பற்றது' என குறிப்பிட்டு இருந்தார்.