< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
5ம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்
|30 Sept 2024 11:06 PM IST
5ம் வகுப்பு பயிலும் சிறுமிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டம் ஜிலோய் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் லைகியூ அகமது குரேஷி. இவர் அந்த பள்ளியில் படித்து வரும் 5ம் வகுப்பு சிறுமிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், பள்ளி சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாச வீடியோக்களையும் காட்டியுள்ளார்.
இது குறித்து சிறுமிகளின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுமிகளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் குரேஷியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேவேளை, ஆசிரியர் குரேஷியை சஸ்பெண்ட் செய்து மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.