சிறு சேமிப்பு திட்டங்களுக்கான விதிமுறைகள் தளர்த்தப்படுகிறது
|சில சிறு சேமிப்பு திட்டங்களுக்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளது.
புதுடெல்லி,
ஆர்.டி. எனப்படும் தொடர் வைப்பு, பொது வருங்கால வைப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா, மகிளா சம்மன் சேமிப்பு, கிசான் விகாஸ் பத்திரம், தேசிய சேமிப்பு பத்திரம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் உள்பட பல சிறுசேமிப்பு திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த சிறு சேமிப்பு திட்டங்கள் நிதி அமைச்சகத்தின் கீழ் பொருளாதார விவகாரங்கள் துறையால் நிர்வகிக்கப்படும் முதலீட்டு திட்டங்களாகும். இதில் சில சிறு சேமிப்பு திட்டங்களுக்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளது.
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.ஐந்தாண்டு கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையானது, கணக்கு தொடங்கிய நாளிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முன்கூட்டியே திரும்பப் பெறப்பட்டால், அஞ்சலக சேமிப்புக் கணக்கிற்கு பொருந்தும் விகிதத்தில் வட்டி வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.