< Back
தேசிய செய்திகள்
பேடிஎம் நிறுவனத்தில் சீன முதலீடுகள் குறித்து விசாரணை
தேசிய செய்திகள்

பேடிஎம் நிறுவனத்தில் சீன முதலீடுகள் குறித்து விசாரணை

தினத்தந்தி
|
12 Feb 2024 3:47 AM IST

பேடிஎம் நிதி சேவை நிறுவனத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

பேடிஎம் நிறுவனம் விதிமுறைகளை மீறி செயல்பட்டதால், அதன் வங்கி செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்து உள்ளது. இந்த நிலையில் பேடிஎம் நிதி சேவை நிறுவனத்தில் (பி.பி.எஸ்.எல்) சீனாவில் இருந்து வந்துள்ள வெளிநாட்டு நேரடி முதலீடுகள் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வெளிநாட்டு முதலீடு திரட்டுவதற்கான உரிமம் கேட்டு ரிசர்வ் வங்கியில் கடந்த 2020-ம் ஆண்டு பி.பி.எஸ்.எல் விண்ணப்பித்து இருக்கிறது. ஆனால் இதை நிராகரித்த ரிசர்வ் வங்கி, வெளிநாட்டு நேரடி முதலீட்டு விதிமுறைகளின் கீழ் மீண்டும் விண்ணப்பிக்குமாறு கடந்த 2022-ம் ஆண்டு அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி பி.பி.எஸ்.எல். நிறுவனம் மீண்டும் விண்ணப்பித்துள்ளது.இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் சீனாவின் முதலீடுகள் குறித்து அமைச்சகங்களுக்கு இடையேயான கமிட்டி விசாரித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

மேலும் செய்திகள்