< Back
தேசிய செய்திகள்
17ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் மத்திய அரசு அழைப்பு
தேசிய செய்திகள்

"17ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்" மத்திய அரசு அழைப்பு

தினத்தந்தி
|
12 July 2022 4:08 PM IST

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 18 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 12 வரை மழைக்கால கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக அக்னிபத் திட்டம், மராட்டிய ஆட்சி கவிழ்ப்பு உள்ளிட்ட விவகாரங்களால் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக 17ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்