< Back
தேசிய செய்திகள்
திருப்பதியில் கவர்னர் ஆர்.என்.ரவி மனைவியுடன் சாமி தரிசனம்
தேசிய செய்திகள்

திருப்பதியில் கவர்னர் ஆர்.என்.ரவி மனைவியுடன் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
30 Dec 2023 4:38 PM IST

கவர்னர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் கோபூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். வி.ஐ.பி. தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்த அவருக்கு, கோவில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து மலையடிவாரத்தில் உள்ள கோசாலைக்கு சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது குடும்பத்தினர், அங்கு நடைபெற்ற கோபூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து அங்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கினர்.



மேலும் செய்திகள்