< Back
தேசிய செய்திகள்
வெளிச்சந்தையில் மேலும் 50 லட்சம் டன் கோதுமை விற்பனை - மத்திய அரசு முடிவு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

வெளிச்சந்தையில் மேலும் 50 லட்சம் டன் கோதுமை விற்பனை - மத்திய அரசு முடிவு

தினத்தந்தி
|
10 Aug 2023 2:13 AM IST

உள்நாட்டில் விலை அதிகரிப்பை குறைக்கும் வகையில் மேலும் 50 லட்சம் டன் கோதுமை மற்றும் 25 லட்சம் டன் அரிசியை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் சமீப காலமாக அரிசி மற்றும் கோதுமையின் விலை அதிகரித்து வருகிறது. எனவே இதை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதில் முக்கியமாக 15 லட்சம் டன் கோதுமை மற்றும் 5 லட்சம் டன் அரிசியை வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்திருந்தது.

இதில் சுமார் 7 லட்சம் டன் கோதுமை இதுவரை ஆன்லைன் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

உணவுத்துறை செயலாளர்

இதைத்தொடர்ந்து மேலும் விலை குறைப்பு நடவடிக்கையாக கூடுதலாக அரிசி மற்றும் கோதுமையை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி 50 லட்சம் டன் கோதுமை மற்றும் 25 லட்சம் டன் அரிசியை வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் விற்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'சமீப காலமாக கோதுமை மற்றும் அரிசியின் விலை அதிகரித்து வருகிறது. எனவே 50 லட்சம் டன் கோதுமை மற்றும் 25 லட்சம் டன் அரிசியை வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது' என்றார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் அரிசி மற்றும் கோதுமை விலை சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்