< Back
தேசிய செய்திகள்
சாலை விபத்தில் அரசு பள்ளி ஆசிரியை பரிதாப சாவு
தேசிய செய்திகள்

சாலை விபத்தில் அரசு பள்ளி ஆசிரியை பரிதாப சாவு

தினத்தந்தி
|
12 Aug 2022 9:20 PM IST

குந்தாப்புரா அருகே சாலை விபத்தில் அரசு பள்ளி ஆசிரியை பரிதாப உயிரிழந்தார்.

மங்களூரு;


உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகாவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவரது மனைவி அம்பிகா. இந்த தம்பதி இருவரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக வேலை செய்து வந்தனர். இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் சென்ற மாடு அவர்கள் மோட்டார் சைக்கிள் முன்பு பாய்ந்தது. மாடு மீது மோதாமல் தடுக்க மோட்டார் சைக்கிளை ஸ்ரீகாந்த் நிறுத்த முயன்றார்.

அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையில் உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் அம்பிகா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த குந்தாப்புரா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அவர்கள் விபத்தில் உயிரிழந்த அம்பிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்