40 பெண்களுக்கு பாலியல் தொல்லை: கோவாவில் பதுங்கி இருந்த அரசு பள்ளி ஆசிரியர் கைது
|40 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
ெபங்களூரு: கொப்பல் மாவட்டம் கரடகி டவுனை சேர்ந்தவர் முகமது அசாருதீன் (வயது 42). இவர் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகா சிங்கபுரா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளிக்கு கரடகியில் இருந்து தினமும் வந்து சென்றுள்ளார். இந்த நிலையில், முகமது ஆசிரியை, மாணவிகள், அக்கம்பக்கத்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அத்துடன் சிலரை மிரட்டி உல்லாசமும் அனுபவித்து வந்துள்ளார். இந்த நிலையில், பெண்களுடன் முகமது அசாருதீன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ காட்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து முகமது அசாருதீன் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கரடகி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆசிரியர் முகமது அசாருதீன் தன்னிடம் பாடம் படிக்கும் மாணவிகள், பக்கத்துவீட்டு பெண்கள் என 40-க்கும் மேற்பட்டோரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், சிலருடன் நெருக்கமாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கோவாவில் பதுங்கியிருந்த அவரை நேற்று கரடகி போலீசார் கைது செய்தனர். அவரை கரடகிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.