< Back
தேசிய செய்திகள்
எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.500 வரை குறைத்திருக்க வேண்டும் -  சுப்ரியா சுலே வலியுறுத்தல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.500 வரை குறைத்திருக்க வேண்டும் - சுப்ரியா சுலே வலியுறுத்தல்

தினத்தந்தி
|
29 Aug 2023 3:54 PM GMT

தங்கள் ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.400 ஆக இருந்தது என்றும், இப்போது ரூ.1150 ஆக விலை உள்ளது என்றும் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனாளிகளும் பயன் பெறும் வகையில் சிலிண்டரின் விலையில் ரூ. 200 குறைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக குறைக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நாடகம். 200 ரூபாயை குறைத்து இந்த நாட்டில் என்ன நடக்கப் போகிறது. ரூ. 500க்கு மிகாமல் குறைத்திருக்க வேண்டும். எங்கள் ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.400 ஆக இருந்தது. ஆனால் இன்று ரூ.1150 ஆக விலை உள்ளது. சிலிண்டர் விலையை ரூ.500 அல்லது ரூ.700 வரை குறைத்திருக்க வேண்டும்.

தற்போது தேர்தல் வர உள்ளதால் மத்திய அரசால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நான்கரை வருடங்களாக பணவீக்கம் இருக்கிறது என்பது அவர்களுக்குப் புரியவில்லையா? வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வால் தான் கர்நாடகாவில் பா.ஜ.க தோற்றது. அதனால்தான் மத்திய அரசு பயப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்