< Back
தேசிய செய்திகள்
புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு இல்லை - மத்திய அரசு அறிவிப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு இல்லை - மத்திய அரசு அறிவிப்பு

தினத்தந்தி
|
23 Aug 2023 12:57 AM IST

புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசு கடந்த ஆண்டு நொறுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்து இருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த மாதம் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்பட்டது. இதுபோல புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கும் தடை விதிக்கப்படலாம் என்ற கருத்து நிலவியது.

இதுபற்றி மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ராவிடம் எழுப்பிய கேள்விக்கு, புழுங்கல் அரிசி ஏற்றுமதியில் எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்க அரசு பரிசீலிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதுபோல தூதரக ஒப்பந்தங்கள் மூலம் ரஷியாவில் இருந்து கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பிரேம் கார்க் கூறுகையில், அரசாங்கத்திடம் உபரி கையிருப்பாக அரிசி உள்ளது. புதிய மகசூல் 2 மாதங்களுக்குள் வரத் தொடங்கிவிடும் என்றார்.

அக்டோபர் 1-ந்தேதி தொடங்கும் சந்தைப்படுத்தல் ஆண்டில், விவசாயிகளிடம் இருந்து 5.2 கோடி டன் புது நெல்லை வாங்குவதற்கு அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், கடந்த ஆண்டு 4.9 கோடி டன் வாங்கப்பட்டதாகவும் சஞ்சீவ் சோப்ரா கூறினார்.

மேலும் செய்திகள்