< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பெற்றோர் அருகிலேயே குழந்தைக்கும் இருக்கை: விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ உத்தரவு
|24 April 2024 2:20 AM IST
விமான பயணத்தில் பெற்றோர் அருகிலேயே குழந்தைக்கும் இருக்கை அளிக்க வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது.
புதுடெல்லி,
விமான பயணத்தின்போது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அருகிலேயே இருக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
விமான பயணத்தின் போது குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் ஒருவரேனும் உடனிருப்பதை உறுதி செய்யவும் இந்த உத்தரவு வழிவகை செய்கிறது.
குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் அமர இயலாமல்போனது குறித்து பல பயணிகள் புகார் தெரிவித்ததை அடுத்து, தனது முந்தைய பரிந்துரைகளில் திருத்தம் செய்து, ஒழுங்குமுறை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.