புதுவையில் 2ஆவது நாளாக ஓடாத அரசு பஸ்கள்... கிராமப்புற பயணிகள் பாதிப்பு
|புதுவையில் 2ஆவது நாளாக இன்றும் அரசு பஸ்கள் ஓடவில்லை.
புதுச்சேரி,
புதுவையில் கடந்தசில நாட்களாக நேர பிரச்சினை காரணமாக புதுவை அரசு பஸ் (பி.ஆர்.டி.சி.) ஊழியர்களை தனியார் பஸ் ஊழியர்கள் தாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றும் அரசு பஸ் ஊழியர்களுக்கும், தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இடையே தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில்,. பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவையில் இருந்து இயக்கப்படும் பி.ஆர்.டி.சி. டி பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. பஸ்கள் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று 2-வது நாளாக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இன்றும் பஸ்கள் இயக்கப்படவில்லை. சென்னை- திருப்பதி உள்ளிட்ட வெளி மாநில பகுதிகளுக்கும் பஸ்கள் ஓடவில்லை. பி.ஆர்.டி.சி. பஸ்கள் இன்று 2-வது நாளாக இயக்கப்படாததால் கிராமப்புற பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.