< Back
தேசிய செய்திகள்
அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர்கள் காயம்
தேசிய செய்திகள்

அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; டிரைவர்கள் காயம்

தினத்தந்தி
|
8 July 2023 12:15 AM IST

சார்மடி மலைப்பாதையில் அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் டிரைவர்கள் காயம் அடைந்தனர்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் சார்மடி மலைப்பாதை அமைந்துள்ளது. சிக்கமகளூரு-மங்களூருவை இணைக்கும் பிரதான சாலை சார்மடி மலைப்பாதை வழியாக செல்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சார்மடி மலைப்பாதையில் சிக்கமகளூருவில் இருந்து தர்மஸ்தலா நோக்கி சென்ற அரசு பஸ்சும், மங்களூருவில் இருந்து சிக்கமகளூரு நோக்கி வந்த அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் இரு அரசு பஸ்களின் டிரைவர்களும் காயம் அடைந்தனர்.

அவர்கள் 2 பேரையும் அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் சார்மடி மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.


மேலும் செய்திகள்