< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தூண்களுக்கு இடையே சிக்கிய அரசு பேருந்து - 4 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்பு
|28 May 2022 12:33 AM IST
கேரளாவில் அரசு பேருந்து ஒன்று இரு தூண்களுக்கு இடையே சிக்கிய நிலையில், 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு வெளியே எடுக்கப்பட்டது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் தூண்கள் அமைக்கப்பட்டு, அவற்றுக்கு இடையே பேருந்துகள் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பேருந்துகளின் அளவிற்கு ஏற்ற வகையில் சீரான இடைவெளியுடன் தூண்கள் அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோழிக்கோடு-பெங்களூரு மார்க்கத்தில் இயக்கப்பட்ட கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்து ஒன்று, அந்த தூண்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது. பேருந்தை வெளியே எடுப்பதற்கு சுமார் 4 மணி நேரம் போராடிய ஓட்டுநர்கள், இறுதியாக தூணில் இருந்த இரும்பு வளையத்தை உடைத்து இடைவெளி ஏற்படுத்தி பேருந்தை சேதமின்றி வெளியே எடுத்தனர்.